கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025 ஆண்டிற்கான மாதாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.
மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறை உடைகள் , விடுதிகள் , அலுவலகங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள் உடைகள் வாகனங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிப்படுத்தல் வகுப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment