சர்வதேச குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்சொன்று இன்று அம்பாரை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மாவட்ட செயலாளர்
சிந்தக அபேவிக்ரம தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டார்.
நகர,அபிவிருத்தி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட மீள்குடியேற்ற திட்ட .வீடுகளுக்கான ஆவனங்கள் உரிய பயனாளிகளுக்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகராஜன் உட்பட. பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி, காரைதீவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment