நிப்ராஸ் லத்தீப்
சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் வியாபார சந்தை
நிப்ராஸ் லத்தீப்
சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் வியாபார சந்தை போன்ற சமூகத் தேவைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தரம் 08 மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்றது.
செயன்முறை தொழிநுட்ப பாட ஆசிரியை திருமதி சாமிலாவின் நேரிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலீக் பிரதம அதிதியாகவும், சிரேஸ்ட ஆசிரிய ஆசோசகர் எம்.எம்.எம். ரபீக், கௌரவ அதிதியாகவும், சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய பிரதி, உதவி அதிபர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இச்சந்தை மாணவர்களின் சமூக தொடர்பாடல் திறன் விருத்தியை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு சிறந்த வெளிகாட்டலை கொடுக்கும் என்ற அடிப்படையிலும், மரக்கறி மற்றும் பழ வகைகளை இனங்காணும் ஆற்றலைப் பெறல், தராசில் நிறுத்தல் மற்றும் அளத்தல் செய்யும் திறனைப் பெறுதல், பணப்பரிமாற்றம், ஒன்றிணைந்து ஒரு வேலையில் ஈடுபடும் பழக்கத்தைப் பெற்றுக்கொள்ளல், குழுச் செயற்பாட்டுத் தன்மையை விருத்தி செய்தல் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் உறவினர்கள் அத்துடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment