சென்னை ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தா ஜீ மகராஜ் அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்திற்கு வருகை



 


வி.சுகிர்தகுமார் 


 சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ இராமகிருஸ்ண மடத்தில் வசிப்பவரும் இராமகிருஸ்ண விஜயம் பத்திரிகையின் ஆசிரியருமான ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தா ஜீ மகராஜ் மற்றும் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் சுவாமி ஸ்ரீமத் உமாதீசானந்தா மகராஜ் ஆகியோர் இன்று (25)அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்திற்கு வருகை தந்து வழங்கினர்.
சுவாமி விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபக தலைவர் த.கயிலாயபிள்ளையின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு இராமகிருஸ் மிசனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டதாக வருகை தந்த சுவாமிகளுக்கு இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் இல்ல மாணவர்கள் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து பூஜை வழிபாடுகளிலும் சுவாமிகள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னராக இந்து இளைஞர் மன்ற ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் இணைந்து கொண்டனர்.
அங்கு வருகை தந்தவர்கள் மத்தியில் சுவாமிகள் சமயம் சார்ந்த பல்வேறு விடயங்களில் சிறப்புரையினை வழங்கினர்.
இதேநேரம் அங்கு வருகை தந்த மக்களால் முன்வைக்கப்பட்ட சமயம் சார்ந்த பல்வேறு கேள்விகளும் பதில் வழங்கினர்.
அத்தோடு சுவாமிகளின் வேண்டுகோளுக்கமைய தனவந்தர் ஒருவரின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசனில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வீடு ஒன்றினையும் திறந்து வைத்தனர்.