ஐசிசி மகளிர் உலக கோப்பை.முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா
கௌஹாத்தியில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் (Laura Wolvaardt) மற்றும் தாஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) ஆகியோர் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தனர்.
Pro Kabaddi 2025 Schedule |Points Table |Results |Stats தாஸ்மின் பிரிட்ஸ் 65 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.மறுமுனையில் அபாரமாக விளையாடிய கேப்டன் லாரா வோல்வார்ட் 115 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.அடுத்தடுத்து சூனே லுஸ் (Sune Luus), அன்னெகே போஷ் (Anneke Bosch), க்ளோயே ட்ரயான் (Chloe Tryon), நதீன் டி கிளார்க் (Nadine de Klerk), சினாலோ ஜாஃப்தா (Sinalo Jafta) உள்ளிட்ட வீராங்கனைகள் ஆட்டமிழந்தனர். IND vs AUS: கோலியை போல் விளையாடுகிறார் கில்.. பாராட்டி தள்ளிய தினேஷ் கார்த்திக் ஆனால் மரிசான் காப் (Marizanne Kapp) பொறுப்புடன் விளையாடி 42 ரன்கள் சேர்த்தார்.ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும், லாரா வோல்வார்ட் அதிரடி காட்டி 143 பந்துகளில் 169 ரன்கள் எடுத்தார். இதில் 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் க்ளோயே ட்ரயான் 33 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி முதல் ஓவரிலேயே டாமி பீமண்ட் (Tammy Beaumont) மற்றும் அமி ஜோன்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.இதன்பிறகு கேப்டன் ஹீதர் நைட்டும் டக் அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு கேப்டன் நாட் சிவர்-பிரண்ட் (Nat Sciver-Brunt) , அலிசா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தது. ஐசிசி மகளிர் உலககோப்பை அரையிறுதி: இந்தியா, ஆஸ்திரேலியா போட்டி எங்கு பார்ப்பது? நேருக்கு நேர் விவரம் ஆனால் முக்கிய கட்டத்தில்நாட் சிவர்-பிரண்ட் 64 ரன்களும், அலிசா 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீராங்கனைகள் சோஃபி 2 ரன்களும், டானி வியாட் 34 ரன்களும் எடுக்க, இங்கிலாந்து மகளிர் அணி 42.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் மரிசான் காப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.


Post a Comment
Post a Comment