அப்துல் வாஹிது மௌலானா அவர்களின் 43 வது வருட கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும், மனாகிபு மஜ்லிஸும், கொடியேற்றமும் !





நூருல் ஹுதா உமர்

சங்கைக்குரிய சங்கை மகான் அஷ்ஷெய்ஹ் அஸ்ஸெய்யிது அஸ் ஸாதாத் அப்துல் வாஹிது மௌலானா அல் காதிரிய்யி, அர் றிபாயி, வ ஷாதுலி குத்திஸ ஸிர்றஹுல் அஸீஸ் அவர்களின் 43 வது வருட கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும், மனாகிபு மஜ்லிஸும். கந்தூரி நிகழ்வும் 2025.11.19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஈருலக இரட்சகர் எம்பிரான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குலவழிச் செல்வர் இற்றைக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எமன் நாட்டு குடியரசு சமஸ்தான ஆளுநரின் குமாரரான இவர்கள் இலங்கை வந்து வெலிகம புதிய தெரு முஹியித்தீன் ஜும்மா பள்ளிவாயலில் அடங்கப்பட்டிருக்கும் சங்கைக்குரிய இமாம் அஷ்ஷெய்ஹ் அஸ்ஸெய்யிது அஸ்சாதாத் ஷேஹ் இஸ்மாயில் இப்னு இஸ்ஸதீன் மௌலானா அல்யெமனி வ ஸபீதீ குத்திஸ ஸிர்றஹுல் அஸீஸ் அவர்களின் அருந்தவப் புதல்வராகிய அக்கரைப்பற்று நகர் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்றலில் அடங்கப்பட்டிருக்கும் அஷ்ஷெய்ஹ் ஸாதாத் அப்துஸ் ஸமது மௌலானா குத்திஸ எஸிர்றஹுல் அஸீஸ் அவர்களின் புதல்வர்களில் கிலாபத்துக்குரிய புதல்வாரன காத்தான்குடி அல்-மத்ரஸத்துல் சமதானியாவில் அடங்கப்பட்டிருக்கும் அஷ்ஷெய்ஹ் ஸாதாத் அப்துல் வகாப் மௌலானா காதிரியி ஷாதுலி குத்திஸ ஸிர்றஹுல் அஸீஸ் அவர்களின் ஏக புதல்வராகிய சங்கைக்குரிய அஸ்ஸாதாத் அல் ஆரிபுபில்லாஹ் அல் காமில் வலி அஷ்ஷெய்ஹ் அபுதாலுஸ் ஸைலான் அப்துல் வாஹிது மௌலானா ஜலாலியத்துல் காதிரிய்யி குத்திஸ ஸீர்றஹுல் அஸீஸ் அவர்களின் 43 வது வருட கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும். மனாகிபு மஜ்லிஸும். கந்தூரி நிகழ்வும் 2025.11.19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற உள்ளது.


 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாத்தையும் இறைநேசர்களின் பறக்கத்தையும் நல்லாசிகளையும் பெற்றுக் கொள்ளுமாறு மஜ்லிஸ் ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.