அப்துல் வாஹிது மௌலானா அவர்களின் 43 வது வருட கொடியேற்றம்



 


நூருல் ஹுதா உமர்


சங்கைக்குரிய சங்கை மகான் அஷ்ஷெய்ஹ் அஸ்ஸெய்யிது அஸ் ஸாதாத் அப்துல் வாஹிது மௌலானா அல் காதிரிய்யி, அர் றிபாயி, வ ஷாதுலி குத்திஸ ஸிர்றஹுல் அஸீஸ் அவர்களின் 43 வது வருட கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது.

அல் காமில் வலி அஷ்ஷெய்ஹ் அபுதாலுஸ் ஸைலான் அப்துல் வாஹிது மௌலானா ஜலாலியத்துல் காதிரிய்யி குத்திஸ ஸிர்றஹுல் அஸீஸ் அவர்களின் திரு பேரராகிய அஸ்ஸெய்யிது அஸ்ஸாதாத் யெஹியா உலூமுத்தீன் மௌலானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கொடியேற்ற வைபவத்தில் கலிபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யிது அஷ்ஷெய்ஹ் அஸ்ஸாதாத் அல் குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.

இங்கு கத்தமுல் குர்ஆன் மஜ்லிஸ், மனாகிப் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ் ஆகியன இடம்பெறுவதுடன் இப்புனித நிகழ்வுகள் 19.05.2025 அன்று கொடியிறக்கத்துடன் முடிவுக்கு வரவுள்ளதுடன் அன்றைய தினம் காலையில் கந்தூரியும் வழங்கப்படவுள்ளது.