இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணியும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சொரேனின் மனைவியும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினருமான கல்பனா சொரேன் அவர்களை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜார்க்கண்டில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், தாழ்த்தப்பட்டோரை மேம்படுத்துதல், மக்கள் மயப்படட முதன்மை கொண்ட அரசியல் பாரம்பரியத்தை தொடர்தல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் செயல்படும் வலிமையான இரக்கமுள்ள பெண்மணியாக, தலைவியாக தன்னை அடையாளப்படுத்தும், கல்பனா சொரேன் அவர்கள் தனது கணவரும் மரபுத்தலைவருமான முதல்வர் ஹேமந்த் சொரேனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சமூகநீதி, பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் நம்பிக்கையுடன் கூடிய மாற்றத்திற்காக குரல் கொடுக்கும் வலிமையும், இரக்கமும் உள்ள ஜார்க்கண்டின் இரும்புப் பெண்மணியாவார்.
இச் சந்திப்பில் இலங்கையின் கிழக்கு மாகாண மேநாள் ஆளுநரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், மலேசியா இந்திய காங்கிரஸின் துணைத்தலைவரும் மலேசிய நாட்டின் மேநாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீசரவணன், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. மஹீவா மாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment