அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு வேலைத்திட்டங்கள்





நூருல் ஹுதா உமர்

எந்தவொரு அனர்த்த நிலையிலும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பது மிக முக்கியம். அதற்காக வெள்ள பாதுகாப்பு நிதி ஒன்றை உருவாக்குவதும், தேவைக்கேற்ப திறக்கவும் மூடவும் கூடிய மதகு வாயில் அமைப்புகளை நிறுவுவதும் அவசியமாகும். இது பிராந்திய மக்களுக்கு நிலையான பாதுகாப்பை வழங்கும். இந்த பணிகள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். சமூக அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அபிவிருத்தி நிலையானதாக அமையும். இதற்கான முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டு, உரிய அதிகாரிகளின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள்  அனர்த்த முகாமைத்துவ செயற்குழு (Working Committee) ஒன்றை அமைப்பது தொடர்பான நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் 2025.11.12 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் இந்த கருத்துக்களை முன்வைத்தார். தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தொடக்கமாக சுமார் 130 பேர் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களில் இருந்து விண்ணப்பித்துள்ளனர். இப்பயிற்சி கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும், அவசரநிலை நடவடிக்கைகளில் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற முறைகள் சிறப்பாக செயல்படுதல் அவசியம். கடந்த சில சம்பவங்களில் ஏற்பட்ட தொடர்பு குறைபாடுகள் பெரிய இழப்புகளுக்குக் காரணமாகியுள்ளன. அவை மீண்டும் நிகழாத வகையில் இளைஞர்களுக்கு மீட்பு நடவடிக்கை, நீச்சல், தொடர்பு திறன் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதனுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூக மட்டப் பயிற்சிகளும், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் பற்றிய பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. அண்மையில் நடத்தப்பட்ட டைவிங் பயிற்சியில் பங்கேற்ற இளைஞர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் ஒரு திறமையான, பயிற்சியுற்ற தொண்டர்களை உருவாக்கி, சாய்ந்தமருது பிரதேசத்தை அனர்த்த முகாமைத்துவத்தில் முன்னோடியாக மாற்றுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்தார்.


 காரணமாகியுள்ளன. அவை மீண்டும் நிகழாத வகையில் இளைஞர்களுக்கு மீட்பு நடவடிக்கை, நீச்சல், தொடர்பு திறன் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதனுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூக மட்டப் பயிற்சிகளும், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் பற்றிய பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. அண்மையில் நடத்தப்பட்ட டைவிங் பயிற்சியில் பங்கேற்ற இளைஞர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எதிர்காலத்தில் ஒரு திறமையான, பயிற்சியுற்ற தொண்டர்களை உருவாக்கி, சாய்ந்தமருது பிரதேசத்தை அனர்த்த முகாமைத்துவத்தில் முன்னோடியாக மாற்றுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்தார்.