பிபிசி பனோரமா ஆவணப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
தொடர் சர்ச்சைகளும் பாரபட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் பிபிசியை பின்தொடர, ஐந்து ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த டிம் டேவி நெருக்கடியை சந்தித்து வந்தார்.
2021-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் நடந்த கேபிடல் ஹில் கலவரங்களைத் தூண்டும் விதமாக டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பேசியதாகத் தோன்றும் வகையில், அவரது உரையின் இரு பகுதிகள் எடிட் செய்யப்பட்டு பனோரமா நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டதாகக் கசிந்த பிபிசியின் உள் குறிப்பு (internal BBC memo) அடிப்படையில் 'தி டெலிகிராப்' பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இந்த ராஜினாமாக்கள் மாற்றத்திற்கான வழியைத் திறக்கும் என பிரிட்டன் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேசமயம் டிரம்ப் இதனை வரவேற்றிருக்கிறார்.


Post a Comment
Post a Comment