நூருல் ஹுதா உமர்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எம். ஸமீலுல் இலாஹியின் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஏ.அப்ரத் அலியின் தலைமையில் சாய்ந்தமருது பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்கள். மேலும் விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச். யு. சுசந்த, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா தமயந்தி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ஏ.முபாறக் அலி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.எம். சிறிவர்தன, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணத்தின் எச்.எம்.எ.பி. ஹேரத், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.முஹமட், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நழீர், ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச மட்ட இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 2025ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் மாஸ் இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
.jpg)

Post a Comment
Post a Comment