அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஸஹ்ரா குறுக்கு வீதி, கொங்கிறீட் வீதியாகின்றது



 



#Rep/நுஸ்கி.
தைக்கா நகர் பிரிவு 16  அட்டாளைச்சேனை ஸஹ்றா குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக உருவாக்கப்படவுள்ளது. அட்டாளைச்சேனை பிரஜா சக்தி  அமைப்பாளர் ஜனாப் இம்தியாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வை இன்று காலை திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பிளருமான ஆபுபக்கர் ஆதம்பாவா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

குறித்த இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான ஜனாபா பாஹிமா, திருமதி ஜனுசா இம்தியாஸ் ஆகியோரும், பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும்  கலந்து சிறப்பித்திருந்தனர்.