பேலியகொடை நகர சபையின் தே.ம.ச உறுப்பினர் இராஜிநாமா



 


தனது கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முழு கவனம் செலுத்தி வரும் இவ்வாறானதொரு தருணத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அவர் தனிப்பட்ட முறையில் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும், நாட்டில் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கம்பஹா மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். அதன் பிரதி ஒன்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.