வி.சுகிர்தகுமார்
அரசாங்கத்தின் காணி உத்தரவுப்பத்திரங்கள் வழங்கும் துரித வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களும் காணி உத்தரவு பத்திரங்களை பெற்று வருகின்றனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7இன் கீழ் 4 பிரிவு மக்களுக்கான காணி உத்தரவுப்பத்திரங்கள் நேற்று (21)வழங்கி வைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தரவுப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி மற்றும் காணி உத்தியோகத்தர் லோஜினி உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மிக நீண்டகாலமாக பலர் காணி உத்தரவுப்பத்திரங்கள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் காணி உத்தரவு பத்;திரங்கள் என்பது மக்களின் பெரும் கனவாக இருப்பதுடன் மிக முக்கிய தேவைப்பாடாகவும் அமைந்துள்ளதாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் இங்கு தெரிவித்தார்.
இவர்களுக்கான காணி உத்தரவு பத்திரங்களை வழங்குவதற்காக அரசாங்கம் துரித நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. அரசின் இந்த வேலைத்திட்டத்தை மிகச்சிறப்பாக முன்னெடுத்துவரும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பாராட்டுகின்றேன் எனவும் கூறினார்.

Post a Comment
Post a Comment