நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த FIASTA 25 வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு 2025.11.22 ஆம் திகதி பீடத்தின் பிரதான அரங்கில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆர். ஹனாஸ் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேக் எம்.எச்.ஏ. முனாஸ் கலந்து கொண்டு உரையாற்றிய துடன் வெற்றிக்கின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வின் போது பீடத்தின் அரபு மொழி துறையின் தலைவர் கலாநிதி ஏ.எம். றாசிக், பல்கலைக்கழக பிரதி சிரேஷ்ட மாணவர் ஒழுக்காற்று அதிகாரி எம்.ஏ. ஜி. பெரோஸ் மற்றும் உடற்கல்வி துறையின் பணிப்பாளர் ஐ.எம்.கடாபி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வை சிறப்பூட்டும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகிகள், விருது பெற்ற மாணவர்கள், போட்டியாளர்கள் மற்றும் மாணவ–மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பீடாதிபதி அஷ் ஷேக் எம். எச். ஏ. முனாஸ் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உற்சாகமூட்டும் விதத்தில் உரையாற்றினார்.
வலியுறுத்தினார்.
பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்பது குறைந்து வருவதை அவர் கவலையுடன் குறிப்பிட்டார். “மாணவர்கள் இலை மறை காய் போல; அவர்களின் மறைந்த திறன்களை வெளிக்கொணர்ந்து தான் நாம் முன்னேற்றம் அடையலாம்” என அவர் எடுத்துரைத்தார்.
மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தை மனதால் நேசித்தால், அவர்கள் எங்கு சென்றாலும் வெற்றியாளர்களாக இருப்பார்கள், நல்ல ஒழுக்கம் மற்றும் புகழ் எங்கும் பறைசாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களது ஒவ்வொரு முயற்சியிலும் ஆதரவளித்த பீடாதிபதி அஷ் ஷேக் எம். எச். ஏ. முனாஸ் அவர்களுக்கு, மாணவர் ஒன்றியம் சார்பில் அவர் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்தார்.“எந்த முயற்சியையும் மறுக்காமல் ஊக்குவித்த தலைவர்,” “எங்களுக்கு உத்வேகம், வழிகாட்டல் அளித்தவர்” என அவர் பாராட்டினார்.
மாணவர்கள் அழுத்தமான சூழல்களில் இருக்கும் போது, அவர்கள் முதலில் செல்லும் இடம் “எங்கள் பீடாதிபதியின் அறை”.அங்கே அவர்கள் பெறும் ஊக்கமும் அன்பும், பல்கலைக்கழகத்தை ஒன்றுபட்டு கட்டியெழுப்ப வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment