மட்டக்களப்பில் டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தியறிக்கையிடல் விழிப்புணர்வு





ஏ.எல்.எம். சபீக் 

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக “டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தியறிக்கையிடல் காலத்தில் ஊடகச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு” இன்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.


இச்செயலமர்வு சட்ட ஊடக மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி சட்டத்தரணி விரஞ்சன ஹேரத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது ஊடகவியலாளர்களுக்கு ஊடகச் சட்டம், ஊடக ஒழுக்கநெறி, சமூக ஊடக இடுகைகளுக்கான சட்ட விதிகள், ஊடக கண்காணிப்பு சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்வில் பங்கேற்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைறூஸ், மேலும் வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியர் ரோபர்ட் அன்டனி உள்ளிட்ட வளவாளராக கலந்து கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.


ஏ.எல்.எம். சபீக்