'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்"




ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில் ...


உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட  06 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது


ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில் ...


தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு

"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 06 பயனாளிகள் புதிய வீடுகள்அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.


இவ் வீடுகள் அமைப்பதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஒரு மில்லியன் ரூபாயும் ஒவ்வொரு பயனாளர்களால் தலா எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆக இவ் வீடுகளின் மொத்த பெறுமதி பதிணெட்டு இலட்சத்து  ஐம்பதாயிரம் பெறுமதியான வீடுகளாகும்


இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தார்  மேலும் இவ் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் Mr சுதா , பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த், தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச கிளை உறுப்பினர்கள் ,பிரதேச செயலக தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்,கிராமசேவை உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள் பயனாளர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.