பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக மீண்டும் உபதவிசாளர் வினோகாந்




 (  வி.ரி.சகாதேவராஜா)

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணைப்பாளராக மீண்டும் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்  எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, கொழும்பு கிரான் மோனாச் ஹோட்டலில் வைத்து நேற்று முன்தினம் (2025. 11. 23) உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார் .

இதன்போது இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கான தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பொருளாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 நியமனம் பெற்ற உப தவிசாளர் வெ.வினோகாந்த  கருத்து தெரிவிக்கையில் ..

தான் தொடர்ச்சியாக இப்பொறுப்பில் அதிக வருடங்கள் செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் மீண்டும் அப்பொறுப்பினை கட்சி தலைமை தன்னிடத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் தனது கட்சிக்கும் தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கும் இன்னும் அதிகமான விசுவாசத்துடன் அர்ப்பணிப்புடன் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.