அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.
அக்கரைப்பற்று சந்தை பகுதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.நேற்று முதல் ஆரம்பித்த பலத்த மழை இன்று (25) காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.


Post a Comment
Post a Comment