09.11.2025
வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி!
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் தந்தை அமரர் வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் அவர்களின் பூதவுடலுக்கு இன்று பொரளை மலர்சாலையில் இறுதி அஞ்சலியை செலுத்தச் சென்றிருந்தேன்.
ஒரு மூத்த தலைவரின் புதல்வரும், அன்பான தந்தையுமான அன்னாரின் இழப்பானது ஈடுசெய்ய முடியாதது. இந்த துயர நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தியமை, அன்னாரின் சமூக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
அனுர தோழரோடு ராம் தோழர் (இராமலிங்கம் சந்திரசேகர்), வசந்த சமரசிங்க தோழர் மற்றும் சக தோழர்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்தோம்
சாணக்கியன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#தோழர்பிரபு
#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka #ANURAKUMARADISSANAYAKE Ramalingam Chandrasegar #vasanthasamarasinge


Post a Comment
Post a Comment