காத்தான்குடியில் சுனாமி பேரலை தாக்கியதன் 21ம் ஆண்டு நினைவு



 


எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

 சுனாமி பேரலை தாக்கியதன் 21ம் ஆண்டு நினைவு தினம்


– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –


சுனாமி ஆழிப்பேரலையின் 21ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு காத்தான்குடி பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் இன்று (26) காலை நடைபெற்றது. 


பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தேசியக்கொடி அரைகம்பத்தில் இறக்கப்பட்டதுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.


இதன் போது உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் ஏ.ஆர்.அகமட் முப்லி, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜறூப் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்