( வி.ரி.சகாதேவராஜா )
இந்துசமுத்திரத்தை உலுக்கிய ஆழிப்பேரலையின் 21 வதுவருட சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காரைதீவு கடற்கரையில் நடைபெற்றது.
காரைதீவில் 2004 சுனாமியில் உயிர்நீத்த 867 பேரை நினைவுகூர்ந்து வருடாவருடம் காரைதீவு கடற்கரையில் றிமைன்டர் விளையாட்டு கழகத்தினரால் நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்றலில் பொதுவான வைபவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த நிகழ்வு இம்முறையும் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை இந்து சமய விருத்திச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு ஆத்மார்த்த சுனாமி ஒளிதீபம் ஏற்றியதோடு அஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இடர் தீர்க்கும் பதிகமும் ஆன்மீக அதிதி சிவசிறி சண்முக மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.


Post a Comment
Post a Comment