26 மில்லியன் நாவிதன்வெளி பிரதேசத்தில் அபிவிருத்தி



 


நூருல் ஹுதா உமர்


நாவிதன்வெளி பிரதேச சபையின் 2025 இறுதி ஆண்டு விஷேட சபை அமர்வு இன்று தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் சபா கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இறை வணக்கத்துடன் ஆரம்பமான விஷேட சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது தவிசாளரது உரையில்

தவிசாளராக பதவி பெற்றதிலிருந்து முதலாவது வரவு செலவு திட்டத்தை வெற்றியடைய செய்ய உதவி தவிசாளர் ,உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து தொடர்ந்து கூறுகையில். 1987 ஆம் ஆண்டின் 15 இலக்க பிரதேச சபைகள் சட்டத்திற்கு அமைவாக மேலதிக வருமானமாக கிடைக்கப்பெற்ற ஐந்து மில்லியன் ரூபாய் நிதிதியினை குறை நிரப்பு பாதீட்டினை சபை அனுமதி பெறப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையை பொறுப்பேற்றதிலிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளது இதற்கு உபதவிசாளர் ,உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி சொல்வதில்   பெருமை கொள்வதாக தெரிவித்தார் .

இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் கோபாலசிங்கம் உதயகுமார் சபையில் உப தவிசாளர் புவன ரூபன் மீது நிவாரண பொருட்கள் வழங்கும் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களிக்கவர்களுக்கு இல்லை என தெரிவித்த தாக குற்றம் சாட்டினார். மேலும் மின் குமிழ் பொருத்தும் விடயத்திலும் பாரபட்சம் உப தவிசாளர் பக்க சார்பாக செயற்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் சோ.கமலேஸ்வரன் குற்றம் சாட்டினார் இவை அனைத்தையும் உப தவிசாளர் மறுதலித்த போதும் புறக்கணிக்கப்பட்ட பொது மக்கள் ஆதாரமாக உள்ளதாக உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.

தனிப்பட்ட  ரீதியில் தன்னார்வலர்கள் மூலம் பாரபட்சமாக நிவாரணம்  வழங்குவதை சபையில் பேசி சபை நேரத்தை வீணடிக்க வேண்டாம். சபை நிதியில் பாரபட்சமாக செயற்பட்டால் சுட்டிக் காட்டுமாறு உறுப்பினர்களுக்கு தவிசாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.