பூண்டுலோயா பிரதான வீதியில் மண்மேட்டுடன் கற்பாறைகள் சரிவு - போக்குவரத்து பாதிப்பு



 


பூண்டுலோயா பிரதான வீதியின் பல இடங்களில் மண்மேட்டுடன் கற்பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து வீழ்ந்ததில் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 


இதனை தொடர்ந்து தற்போது பொலிஸார் ,பொது மக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி, போக்குவரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர் .

 


தொடர்ந்தும் மழையுடன் காலநிலை நீடிக்கும் பட்சத்தில், குறித்த வீதியில் இருபுறமும் பல இடங்களில் மண்மேட்டுடன் கற்பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


எனவே இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

 


குறிப்பாக நுவரெலியாவில் பல இடங்களில் பிரதான வீதியில் சரிந்து விழுந்த மண் மற்றும் கற்பாறைகளை அகற்றி வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

 

செ.திவாகரன்.