களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவில், பிரஜாசக்தி தவிசாளர் நியமனங்கள்




 'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்கான   குழுக்களின் தவிசாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 15.12.2025 இல் இடம்பெற்றது


ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில்  'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான  குழுக்களின் தவிசாளர்ளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிகுடி  பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட பிரஜசக்தி இணைத்தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது.


பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான  'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள தவிசாளர்கள்  இணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல்  நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச முக்கியஸ்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.


#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment  #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka

#AKD #ANURAKUMARADISSANAYAKE #PresidentAKD