( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் தொப்பிகல மற்றும் நாவலடியில் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை இன்று வழங்கிவைத்தது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்
உதவிப்பொது முகாமையாளர் சுவாமி உமாதீஷானந்தா ஜீ மஹராஜ் நேரில் சென்று இன்று (10) புதன்கிழமை வழங்கி வைத்தார்.
இதேவேளை, மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் கடந்த ஒரு வார காலமாக அங்கு தங்கி இருந்து 12 முகாம்களுக்கான நிவாரணங்களை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment