ஜனாதிபதி இன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு விஜயம் செய்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் அடைந்த முன்னேற்றம் தொடர்பாக ஆராயவும் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காகவும்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக இன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு விஜயம் செய்தார்.
திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அதன் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
93 ஆண்டுகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகபட்ச வருவாயான 2203 பில்லியன் ரூபா வருவாயை ஈட்ட அந்தத் திணைக்களத்தினால் இவ்வாண்டில் முடிந்துள்ளதோடு இது இந்த ஆண்டு வருவாய் இலக்கை விட 33 பில்லியன் ரூபா மேலதிக வருவாய் சேகரிப்பாகும். கடந்த ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது இது 15% அதிகரிப்பாகும்.க டந்த ஆண்டில் எமது நாட்டு பொருளாதாரத் துறை ஈட்டிய மற்றொரு வெற்றியாக இது பதியப்படுவதோடு, அதற்காக அர்ப்பணித்த அனைத்து பணியாளர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் பெறப்பட்ட இந்த சாதனைகள் அனைத்தின் பலன்களும் நாட்டு மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், அதன்படி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை ஒதுக்குவதன் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.


Post a Comment
Post a Comment