கல்முனையில் அரச ஒசுசல கிளை ஆதம்பாவா எம்.பி திறந்து வைப்பு.
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 68வது அரச ஒசுசல கிளை கல்முனையில் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா இதனை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர், வைத்தியர்கள், பிராஜாசக்தி தவிசாளார்கள், கல்முனை பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment