அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்



 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           
 சுவாமி விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான த.கயிலாயபிள்ளையின் தலைமையில் நேற்று (23)இடம்பெற்ற அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் WG திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை ஆணையாளர் MBA சுபியான் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா ஆகியோர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வில் விசேட அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலய முன்பள்ளி பாடசாலைகளின் இணைப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.விவேகானந்தராஜா சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் கே.ஜெயதாஸ் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் தெய்வேந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
35 வருடங்களை கடந்து பல்வேறு சேவையாற்றிவரும் இந்து இளைஞர் மன்றத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்தினால் 34 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படும் பாலர் பாடசாலையின் விடுகை விழாவிற்கு வருகை தந்த அதிதிகளுக்கு மாணவர்கள் பெருவரவேற்பை அளித்தனர்.
இதன் பின்னராக மாணவர்களின் கலைத்திறமையினை வெளிக்காட்டுகின்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
மாணவர்களின் சிறப்புமிக்க கலை நிகழ்வுகளை கண்டுகளித்த அதிதிகள் சிறப்பாக இயங்கிவரும் பாலர் பாடசாலை மற்றும் அதனை வழிநடத்தும் ஆசிரியர்கள் இந்து இளைஞர் மன்றத்தினரை பாராட்டி பேசினர்.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் றுபு திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை ஆணையாளர் யுடீயு சுபியான் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.