நூருல் ஹுதா உமர்
எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தில் பாடசாலை சத்துணவுத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சத்துணவு வழங்குநர்களுக்கான விசேட செயற்திட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது 42 சத்துணவு வழங்குனர்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியானவர்களுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் உணவைக் கையாளுதல் தொடர்பான உணவுச் சட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு சரிவிகித உணவை வழங்குவதன் அவசியம் மற்றும் போசாக்குள்ள உணவுகளைத் தயாரிக்கும் முறைகள் குறித்து தெளிவூட்டப்பட்டது.
மாணவர்களின் ஆரோக்கியமான கற்றல் சூழலை உறுதிப்படுத்த எமது குழுவினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment