சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கௌரவிப்பு !



 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (31.12.2025) மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, அலுவலகத்தின் புதிய சமையலறை திறப்பு விழாவும் இடம்பெற்றது. இது உத்தியோகத்தர்களின் நலன் மற்றும் வசதிகளை மேலும் மேம்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது. இந்நிகழ்வின் போது அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நினைவுச் சின்னங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் விசேடமாக, ஊழியர்கள் பாராட்டு மற்றும் விருது வழங்குதல் (Staff Appreciation & Awarding), சிறந்த தாய் ஆதரவு குழு - (PHM கள்) விருது (Best Mother Support Group), சிறந்த NCD குழுவினர் - (SPHI மற்றும் குழு) (Best NCD Performers), சிறந்த வருகை விருது (Outstanding Attendance Award), ஆண்டின் சிறந்த பணியாளர் (Best Employee of the Year) போன்ற பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்று, உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் பெருமைப்படுத்தப்பட்டன.

அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் சேவை உணர்வின் அடையாளமாக அமைந்த இந்நிகழ்வு, 2025 ஆம் ஆண்டை இனிய நினைவுகளுடன் விடை பெற்று, புதிய ஆண்டை புதிய நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கும் ஒரு அழகிய தருணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.