சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் உணவகத்தை மூடி சீல் வைப்பு !




 நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கடந்த சனிக்கிழமை (06.12.2025) கைப்பற்றப்பட்ட தரமற்ற மற்றும் பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் தொடர்பான வழக்கு, இன்று (09.12.2025) சம்மாந்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை பேணும் விதமாக, கௌரவ நீதிமன்றம் உணவக உரிமையாளருக்கு 48,000/-  அபராதம் விதித்ததுடன் எதிர்வரும் 19.12.2025 வரை உணவகத்தை மூடி, அனைத்து திருத்த வேலைகளையும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய செய்ய தீர்ப்பை வழங்கியுள்ளது:

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பிரகாரம்,சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர், இன்று சம்பந்தப்பட்ட உணவகத்தை முறையாக மூடி (சீல் வைத்து) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.