நூருல் ஹுதா உமர்
மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில், புதிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து விபரமான கலந்துரையாடினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகள், பிரச்சனைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.
.jpg)

Post a Comment
Post a Comment