களுவாஞ்சிக்குடி பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு




 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்நிலையில நீதிமன்ற உத்தரவைப் பெற்று மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.