சந்திப்பு




(நூருல் ஹுதா உமர்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எஸ்.எம். அப்துல் வாஷித் அவர்களுக்கும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களுக்கிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு இன்று நண்பகல் பிரதேச சபைகளின் தவிசாளர் காரியாலயங்களில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சபைகளின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் பொத்துவில் பிரதேச சபையில் தான்  தவிசாளராக செயற்பட்ட அனுபவ பகிர்வை தவிசாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களுடனான அறிமுகத்தினை மேற்கொண்ட நாவிதன்வெளி தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு சபைகளுக்கும் சென்று வருவதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவிசாளருடன் இணைந்து பயணிக்குமாறு அங்கிருந்த உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.நிவாஸ் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச மக்களின் குறைபாடுகளை மனுவாக தவிசாளரூடாக பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.