( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “Wings of East 2025” நிகழ்ச்சியின் அம்பாறை மாவட்ட கண்காட்சி மற்றும் கலாச்சார இசை நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை அறுகம்பேயில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு ஏராளமான கலாச்சார மதிப்புமிக்க பொருட்கள், பாரம்பரிய உணவுக் கடைகள், கலாச்சார இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. கிழக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர், அம்பாறை நகர சபைத்தவிசாளர், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இதில் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment