குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த மாகாண மற்றும் பிரதேச சபை வீதிகளின் புனரமைப்புப் பணிகள் அடுத்த 02 வாரங்களுக்குள் நிறைவு
Ø இறுதி நுகர்வோர் வரை சேவைகளை பெற்றுக் கொடுப்பது அனைத்து சேவை வழங்குநர்களின் பொறுப்பாகும்
Ø கிணறுகளை சுத்தம் செய்வதை விரைவுபடுத்துவதற்கு தொடர்புடைய பிரதேச சபைகள் தலையிட வேண்டும்
மீள்குடியேற்றத்திற்காக மெத்தெகெட்டிய, கொகரெல்ல சங்கமு ராஜமஹா விஹாரை விகாராதிபதியினால் 20 ஏக்கர் காணி
எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
உருவாக்கப்பட இருக்கும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ் சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக தனிப் பிரிவு நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அதன் கீழ் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் காண முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட செயலகத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த 02 வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு திறக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.


Post a Comment
Post a Comment