இன்று நாட்டின் பல பாகங்களில் கனமழை எச்சரிக்கை!
இலங்கையில் வடகிழக்கு பருவமழை நிலை படிப்படியாக உருவாகி வருகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.
மாலை 1.00 மணிக்கு பின் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
காலை வேளையின் ஆரம்பப் பகுதியில், மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment
Post a Comment