(CRM) தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வு



ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்          

 சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமானது வலுவூட்டல் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் சகல தரவுகளையும் (CRM) கணிணி ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கையினை தேசிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.
இதற்கான மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் தரவேற்றம் செய்யும் முறைமைகள் தொடர்பில் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வுகளையும் நடாத்தி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக இன்று (16) திருக்கோவில்; மற்றும் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை பொத்துவில் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் தலைமைப்பீட முகாமையாளர் ஏ.அரசரெத்தினம ஒருங்கிணைப்பில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் தலைமையில் இன்று (16)ஆரம்பமானது.
  வளவாளராக கணிணி மயப்படுத்தலுக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் ரி.தெய்வேந்திரன் கலந்து கொண்டு சிறந்த விளக்கத்தினை வழங்கினார்.
இதன்போது சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ..நேசராஜா அவர்கள்  மற்றும் சமுர்த்தி முகாமையாளர் சதீஸ் உள்ளிட்ட முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.