(இரண்டாம் நாள்)
=====================
(சர்ஜுன் லாபீர்)
நாட்டில் நிலவும் வறுமையை ஒழித்து, கிராமிய ரீதியில் பொருளாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்குடன், அரசாங்கத்தின் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தில் சமூக அபிவிருத்தி குழுக்களின் தவிசாளர்கள்,செயலாளர்கள் மற்றும் பதவிவழி உறுப்பினர்களுக்கான பிரஜா சக்தி செயற்திட்டம் சம்மாந்தமான இரண்டாவது நாள் பயிற்சிப் பட்டறை இன்று(16) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் பயிற்சி பட்டறையில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும்,பொருளியல் துறை கலாநிதியுமான ஏ.எல் முஹம்மது அஸ்லம் வளவாளராக கலந்து கொண்டு பிரஜாசக்தி கருத்திட்டம் தொடர்பாக தௌிவூட்டல்களை வழங்கியதுடன,சமூக அபிவிருத்தி சபைகளின் பங்களிப்புகள்,அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு செயற்திட்டம் தொடர்பான தொடர்பான நடவடிக்கைகள் சம்மந்தமாக தெளிவுபடுத்தினார்.


Post a Comment
Post a Comment