தனது எதிர்கால கல்விக்கு என்ன நடக்கும் என்று கடுகளவேனும் சிந்திக்காமல் ஒட்டுமொத்த பாடசாலை நிர்வாகத்தையே புரட்டிபோட்டு அநீதிக்கு எதிராக நின்ற Gen Z தலைமுறையின் சூப்பர் கேர்ள் பற்றிய தேடல் தான் இது.
இலட்சியங்கள் சமூகமயப்படுத்தபடும் அதே நேரத்தில் முரைகேடுகளும் துர்நடத்தைகளும் சமூகமயமாக்கப்பட்டால், அந்த சமூகம் பழமைவாதத்துக்கு இன்னும் ஆழமாக தள்ளப்படுகிறது என்று பொருள் படும்.
இந்த படுபாத செயல்கள் ஒரு நாட்டின் உயரிய சபை பாராளுமன்றத்தை மாத்திரமல்ல இன்று கல்வி போதிக்கும் பாடசாலைகளை கூட விட்டு வைக்கவில்லை.
உண்மையில் பிள்ளைகளின் உணர்வு, புரிதல், சுய கெளரவம், சிந்தனை, உள்ளம், செயல் என அனைத்தையும் சலவை செய்து அவர்களுக்கு அறிவுரைகளையும் புத்திமதிகளையும் கூறி முன்னுதாரணமாக இருந்து குறிக்கோள் உள்ள ஒரு பிள்ளையை உருவாக்க வேண்டிய பாடசாலை கட்டமைப்பு உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் (Emotionally and physiologically affected )பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையை சமூகமயப்படுத்தி விடுகிறது.
பெரும்பாலான நேரங்களில் இந்தப் பாடசாலை கட்டமைப்புக்குள் பாரிய அநீதி இழைக்கபடுகிறது.
ஆனால் தமக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றும் தெரிந்தும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பயத்தால் வாய் திறப்பதில்லை.
ஆனால் இந்த Gen Z தலைமுறை என்பது வேறு. படு பயங்கரமானது. இதனால் தான் இந்த தலைமுறை பிள்ளைக்கு பின்னால் இருந்த அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் தாம் அசிங்கப்பட போகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நடந்த கலர்ஸ் நைட் நிகழ்வு தான் இது.
பிள்ளையின் பெயர் சனித்மா சினாலி. கடந்த 2023 இல் பாடசாலையின் விளையாட்டு தலைவியாக இருந்து இருக்கிறார்.
அவர் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இறுதிப் போட்டி வரை சென்று இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக பாடசாலைக்கு புகழை ஈட்டிகொடுத்து இருக்கிறார். இனி இல்லையென்று திறமையான மாணவி என்று அவரது கடந்த காலம் சொல்கிறது. கலர்ஸ் நைட் அன்று காலை Rehearsal க்கு செல்லாமையால் சனித்மாவுக்குரிய விருது பிறிதொரு மாணவிக்கு சென்றிருக்கிறது.
காலையில் பரீட்சை ஒன்றிருக்கிறது தன்னால் Rehearsal க்கு வர முடியாது என சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அறிவித்தும் அநியாயம் நடந்து இருக்கிறது சனித்மாவுக்கு.
ஆனால் அதனை பாடசாலை நிர்வாகம் வேண்டுமென்றே புறகணித்து இருக்கிறது. ஏன் ஒரு திறமையான மாணவி பாடசாலை நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு இருக்கிறார்?
தகுந்த காரணம் இருந்தும் தனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டு பிறிதொருவருக்கு வழங்குவது எவ்வளவு பெரிய அநியாயம்?
நானோ நீங்களோ சும்மா இருப்போமா இல்லை தானே. இங்கு தான் இருக்கிறது ட்விஸ்ட். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சனித்மா மைக்கை எடுத்து வெளி உலகுக்கு சொல்வாள் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
உரத்து சொன்னால் சனித்மா. அவளது கையில் இருக்கும் மைக்கை ஓஃப் செய்யுங்கள் என்று அதிபர் கூறும் வரை. அது மட்டுமா இது இப்போது எட்டுதிக்கும் காட்டுத்தீயை விட அசுர வேகத்தில் பரவி இருக்கிறது.
இனியாவது பாடசாலைகளில் இடம்பெறும் ஊழல், மோசடி என்பவற்றுக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாடசாலை கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த முனையும் எவரையும் விட்டு வைக்க கூடாது.
அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இல்லையேல் சனித்மாவின் இந்த முயற்சி பிரயோசனமற்றதாக மாறி விடும்.
எது எப்படியோ அநீதி ஆட்சி செய்யும் உலகில், நீதிக்காக தனித்து எழுந்து நின்ற சானித்மாசினாலியும் இந்த நாட்டிற்கு ஒரு சொத்து அவ்வளவு தான்.
இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹெட்ஸ் ஒஃப் சனித்மா. ❤️🫡
Copy
எழுத்தும் தேடலும் - எம்.வை.எம்.சியாம்


Post a Comment
Post a Comment