அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகரை இடமாற்ற கோரி,மட்டக்களப்பு மாவட்டத்தில்



 


ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு 

கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் வேலைநிறுத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக  பாதிப்பு -தூர இட நோயாளர்கள் திரும்பிச் சென்றனர்


ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு 


அரச வைத்திய  அதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன 

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரே ஒரு போதனை வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிகள் இடம்பெறாமையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் 


தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைகளுக்காக மற்றும் கிளினிக்களுக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்தது 


குறித்த வைத்தியசாலையில் அவசர வைத்திய பணிகள் மாத்திரம் இடம் பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சனி தெரிவித்தார் .


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரிய குறித்த வேலை நிறுத்தம் இடம் பறுவதாக தெரிவிக்கப்படுகிறது