நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானங்களுக்கு அமைவாக, அனர்த்தங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளையும் சீரமைத்து, அவற்றை தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை பொதுமக்களிடம் ஒப்படைத்து, அதனை மேற்பார்வை செய்யும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நடவடிக்கையை அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னெடுத்து வருகிறது.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று (13) செவ்வாய்க்கிழமை, பள்ளிக்குடியிருப்பு முதலாம் பிரிவில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு பின்னால் காணப்படும் வீதிகள், பொதுமக்களின் நேரடி பங்களிப்புடனும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தின் ஈடுபாட்டுடனும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
வரம்புக்குட்பட்ட வளங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருந்த போதிலும், தன்னால் முடிந்த அளவைத் தாண்டி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக அக்கரைப்பற்று பிரதேச சபை மேற்கொண்டு வரும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளதாகவும், சவால்களை இதய சுத்தியுடன் ஏற்றுக்கொண்டு, மக்கள் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக், உப தவிசாளர், உறுப்பினர்கள், சபை செயலாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அனைத்து ஊழியர்கள் மற்றும் இந்த நடவடிக்கைகளுக்கு தோள் கொடுத்து பங்களிக்கும் அனைவருக்கும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்


Post a Comment
Post a Comment