சிரியா குண்டுத்தாக்குதலில் 45 பேர் பலி



தெற்கு டமாஸ்கஸ் பகுதியில் சைதா ஷெய்னப் எனப்படும் ஷியா வழிபாட்டிடத்துக்கு அருகே இரட்டைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 45 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
அங்கிருந்த கட்டிடங்களும் கார்களும் எரிந்து கருகிப்போனதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
எரிந்துபோன ஒரு கட்டிடத்தில் ஒரு இராணுவ தலைமை அலுவலகமும், குடும்பங்கள் தங்கும் இருப்பிடங்களும் இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஷியா முஸ்லிம்களால் பெரும் புனித இடமாக கருதப்படும் இந்த வழிபாட்டிடத்துக்கு பெருமளவு யாத்திரிகர்கள் வருவது வழக்கம்.
முஹமது நபியின் ஒரு பூட்டியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த வழிபாட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்பது, லெபனானின் ஷியா அமைப்பான ஹெஸ்புல்லா மற்றும் இரான் ஆகியன அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒரு காரணமாக கூறப்படுகின்றது.