பல தசாப்தங்களாக பிரிட்டிஷ் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக இருந்த, மூத்த ஒலிபரபாளர் டெர்ரி வோன் தமது 77ஆவது வயதில் காலமானார்.
ஒரு ஒலிபரப்பாளராம தனித்துவம் பெற்றிருந்தார் டெர்ரி வோன்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதை குறுகிய காலத்திற்கு தைரியமாக எதிர்கொண்டு இறந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அயர்லாந்தில் பிறந்த, டெர்ரி வோன் 1960களில் பிபிசியில் சேர்ந்தார். விரைவில் வானொலியில் நேரடியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு ஒலிபரப்பாளராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.
அவரது மென்மையான ஒலிபரப்பு பாணி மற்றும் உடனடி நகைச்சுவை ஆகியவை 1980களில் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை அவரது தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சிக்கு ஈர்த்தது.
அவர் யூரோவிஷன் பாடல் போட்டி ஒளிபரப்பை பிபிசிக்காக தொகுத்து வழங்கினார்.
குழந்தைகளுக்கான பல அறக்கட்டளைகளுக்காகவும் அவர் லட்சக் கணக்கான டாலர்கள் நிதியை சேகரித்துக் கொடுப்பதில் பெரும் பங்கு வகித்திருந்தார்.