இலங்கை ஜெனீவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: பான் கீ மூன்



இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்திசைந்துள்ள இலங்கை அரசாங்கம், தான் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 
நீதி வழங்குவதற்கான பொறிமுறைகளில் சர்வதேச பங்களிப்பின் முக்கியத்துவம் அவசியமானது. எனவே, இலங்கையில் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படும்போது அதற்கான நீதிப் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்புவேண்டும். தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பரந்தளவிலான கலந்துரையாடல்கள் நீதிப் பொறிமுறையின் மாதிரியை உருவாக்க உதவியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் ஊடகங்களிடம் பேசிய பான் கீ மூனின் பேச்சாளரான ஸ்டீபன் டுஜாறிக் இதனைத் தெரிவித்துள்ளார்.