மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்



மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு, காந்தி பூங்கா முன்றலில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
தமக்கான வேலை வாய்ப்பை விரைவில் பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.