ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அடுத்த மாதம் இலங்கையில்



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைன் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளார்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் அடுத்த மாதம் 06ம் திகதிஅவர் இலங்கை வரவுள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்யித் அல் ஹுஸைனின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த சில திங்களுக்கு முன்னர் வரவேற்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.