கொழும்பில் நாளை சர்வமத பாதயாத்திரை



நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதி­களை விடு­தலை செய்­யக்­கோரி சர்­வ­மதத் தலை­வர்கள் நாளை ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் அல­ரி­மா­ளி­கையை நோக்கி பாத­யாத்­தி­ரை­யொன்றை நடத்­த­வுள்­ளனர்.
நாளைக் காலை 9 மணி­ய­ளவில் மகசின் சிறைச்­சாலை முன்­றலில் ஒன்­று­கூடும் சர்வ மதத்­த­லை­வர்கள் அங்­குள்ள சிறைக்­கை­தி­களை நேரில் சந்­திக்­க­வுள்­ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்­களின் கோரிக்­கை­க­ள­டங்­கிய மக­ஜ­ருடன் ஜனா­தி­பதி செய­லகம், அல­ரி­மா­ளிகை நோக்­கிய பாத யாத்­தி­ரையை ஆரம்­பிக்­க­வுள்­ளனர்.
தமிழ் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு ஏற்­பாடு இந்தப் பாத­யாத்­திரை ஏற்பாடு செய்துள்ளது.