மலையக மக்கள் புதிய கிராம எழுச்சியுடன் லயன் வீட்டிலிருந்து மாற்றம் பெற்று தனி வீடுகளில் வாழ நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் அபிவிருத்தி தொலைநோக்குக்கு அமைவாகவும் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிக்காட்டலின் பேரிலும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் அரசாங்க நிதி வழங்களின் மூலம் பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தில் பசும்பொன் புதிய கிராம் அமைக்க 186 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் (31.01.2016) அன்று மாலை நடைபெற்றது. இதில் மத சமய அனுஷ்டனங்களும் இடம் பெற்று அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ம.திலகராஜ், வடிவேல் சுரேஸ், மனிதவள அபிவிருத்தி நிதிய தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.ராஜாராம் ஆகியோருடன் இன்னும் பலரும் கலந்து கொண்டுள்ளதை படத்தில் காணலாம்.

